60 வயதிற்கு பிறகு கவலை இல்லாமல் வாழ எல்ஐசியில் ஒரு சிறந்த திட்டம் உள்ளது. இந்த திட்டத்தின் பெயர் ஜீவன் ஆனந்த் பாலிசி திட்டம். இந்த திட்டம் எல்ஐசியின் சிறந்த முதலீட்டு திட்டம் ஆகும். நீங்கள் உங்களது 35 வயதில் இந்தத் திட்டத்தில் இணைந்தால், மாதத்திற்கு 2,500 செலுத்தி வந்தால் போதுமானது. ஒரு ஆண்டுக்குப் பிறகு உங்களுக்கு 22,500 ரூபாய் பணம் ஒவ்வொரு ஆண்டும் கிடைக்கும். இதில் போனஸ் தொகையாக ரூபாய் 10,000 கூடுதலாக கிடைக்கும். 20 ஆண்டுகளுக்கு உங்களுக்கு வருடாந்திர பென்சன் வந்து கொண்டு இருக்கும்.
35 வயதில் நீங்கள் பாலிசியை கட்டத் தொடங்குகிறீர்கள் என்றால் 20 ஆண்டுகளுக்குப் பிறகு நீங்கள் கட்டும் தொகை ரூபாய் 5 லட்சம். 20 தவணைகளில் வருடாந்திர பென்ஷன் 22 ஆயிரத்து 500, கூடுதலாக பத்தாயிரம் போனஸ் கிடைக்கும். மொத்தமாக உங்களுக்கு கிடைக்கும் தொகை 4.60 லட்சம். இதில் நீங்கள் டெபாசிட் செய்த தொகை, அதாவதுநீங்கள் கட்டும் தொகை 5 லட்சம். இதை சேர்த்தால் 9.60 லட்சம் கிடைக்கும். நீங்கள் ஒவ்வொரு நாளும் 79 ரூபாயை உங்களுக்காக, உங்களது முதுமை வாழ்விற்காக நீங்கள் சேர்த்து வைத்தால் 60 வயதுக்குப் பிறகு ஒவ்வொரு ஆண்டும் 27 ஆயிரத்து 664 ரூபாய் பென்சன் வாங்கமுடியும்.