2022-23 ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையுடன் தொடங்கியது. இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் அவர் உரையாற்றினார். அந்த உரையில் மத்திய அரசின் சாதனைகளை பட்டியலிட்டு பேசினார். அதன் தொடர்ச்சியாக பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட்ட நிலையில் இன்று 2022- 23 ஆம் நிதியாண்டுக்கான காகிதமில்லா பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று 11 மணி அளவில் தாக்கல் செய்தார். அந்த பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், எல்ஐசி பொதுப்பங்கு வெளியீடு விரைவில் நடைபெறும் என தெரிவித்துள்ளார்.
நடப்பு நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 9.27 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்ற முக்கியத்துவம் வழங்கப்படும். சுயசார்பு இந்தியா திட்டத்தின் கீழ் 60 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன என்று என்று கூறினார். இரண்டாவது முறையாக காகிதமில்லா நிதி அறிக்கையை நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இது அவர் தாக்கல் செய்யும் நான்காவது பட்ஜெட் ஆகும்.