இங்கிலாந்தில் உள்ள புல்பன் தொழிற்பேட்டையில் ஒரு குழுவாக வந்த திருடர்கள் கடந்த நவம்பர் 11-ஆம் தேதி அதிகாலை 4.44 மணியளவில் திருடி சென்றுள்ளனர். அதாவது போர்ஸ், ஏரியல் ஆட்டம் போன்ற 5 சொகுசு கார் மற்றும் அரிய கார்களை வெறும் 60 வினாடிகளில் திருடி சென்றுள்ளனர். இந்நிலையில் திருட்டுப் போன இந்த கார்களின் மதிப்பானது சுமார் 7,00,000 பவுன்டுகள் என தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்து எசெக்ஸ் காவல் துறையின் டிவிட்டர் கணக்கில் பகிரப்பட்ட அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
சுமார் ஒரு நிமிடம் 15 வினாடிகள் நீடிக்கும் இந்த வீடியோவில் 60 வினாடிகளுக்குள் விலை உயர்ந்த கார்களை திருடர்கள் திருடுவது தெரிகிறது. மேலும் இந்த திருட்டு சம்பவத்தை தற்போது போலீசார் விசாரித்து வருவதாகவும், சந்தேகத்திற்குரிய விதமாக யாரேனும் தெரிந்திருந்தால் உடனடியாக தங்களை தொடர்பு கொள்ளுமாறும் காவல்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர். Mercedes Maybach என்ற காரை மட்டும் தற்போது போலீசார் மீட்டுள்ளனர். மேலும் குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.