தமிழகத்தில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் திமுக கட்சி வெற்றி பெற்றது. இதையடுத்து திமுக கட்சியின் தலைவர் மு க ஸ்டாலின் முதல்வராக பதவியேற்றுக்கொண்டார். இவர் பதவி ஏற்ற நாள் முதலே தேர்தல் வாக்குறுதிகள் பலவற்றை நிறைவேற்றி வருகிறார். இருப்பினும் சில வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாததால் காரணத்தினால் தொடர்ந்து எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. இதிலும் முக்கியமாக விவசாய நகை கடன், கல்விக் கடன் குறித்து தொடர்ந்து பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்நிலையில் தமிழகத்தில் நகை கடன் நிச்சயம் தள்ளுபடி செய்யப்படும் என அமைச்சர் ஐ பெரியசாமி தெரிவித்திருந்தார். இது தொடர்பாக பேசிய போது அவர் 60 நாட்களில் குழந்தை பிறக்குமா? நாங்கள் ஆட்சி அமைத்து இரண்டு மாதங்கள் ஆன நிலையில் பல நலத்திட்டங்களை கொண்டு வந்துள்ளோம். நகை கடன் தள்ளுபடி சம்பந்தமாக தொடர்ந்து ஆலோசனை நடைபெற்று வருகின்றது. கூடிய விரைவில் நல்ல முடிவினை முதல்வர் முக ஸ்டாலின் அறிவிப்பார் என்று அவர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் நகை கடன் தள்ளுபடி குறித்த அமைச்சரவை பெரியசாமி கூறிய கருத்திற்கு அதிமுக கடுமையான விமர்சனத்தை முன் வைத்துள்ளது. அதில் அவர்கள் தெரிவித்துள்ளதாவது: ” 60 நாட்களில் குழந்தை பிறந்து விடாது தான். ஆனால் குழந்தை பிறப்பதற்கான அறிகுறி தெரிந்துவிடும். நகைகளுக்கு கூட்டுறவு வங்கி நோட்டீஸ் அனுப்பியுள்ளதே? இதனை நாங்கள் விவாகரத்து நோட்டீஸ் என்று எடுத்துக் கொள்ளலாமா? ஐ பெரியசாமி அவர்களே” என்று கேள்வி எழுப்பி கடுமையாக விமர்சனம் செய்துள்ளது.