Categories
கரூர் மாவட்ட செய்திகள்

60 அடி பள்ளத்தில் கவிழ்ந்த டிராக்டர்….. வடமாநில தொழிலாளி பலி…. போலீஸ் விசாரணை…!!

60 அடி பள்ளத்தில் டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் வடமாநில தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டத்தில் உள்ள கோடந்தூரில் தனியாருக்கு சொந்தமான கல்குவாரி அமைந்துள்ளது, இங்கு ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த சலீம்(24) சுதீப்மினிஸ்(21) ஆகிய இருவரும் ஓட்டுநர்களாக பணிபுரிந்து வந்துள்ளனர். நேற்று முன்தினம் இரண்டு வாலிபர்களும் டிராக்டரில் கல்குவாரிக்கு சென்றனர். அப்போது எதிர்பாராதவிதமாக 60 அடி பள்ளத்தில் டிராக்டர் விழுந்தது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த 2 வாலிபர்களையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு சுதீப்பை பரிசோதித்து பார்த்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். மற்றொரு வாலிபருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |