அமெரிக்காவில் உறைந்த குளத்தில் தவறி விழுந்த தங்கையை காப்பாற்ற குதித்த அண்ணன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்காவில் அபிகாயில் லக்கெட் என்ற 6 வயது சிறுமி கடந்த ஞாயிற்றுக்கிழமை தன் சகோதரர்களுடன் வீட்டின் அருகே உள்ள உறைந்த குளத்தின் பக்கத்தில் விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது சிறுமி திடீரென குளத்துக்குள் தவறி விழுந்துள்ளார். அவருடைய 10 வயது சகோதரன் பெஞ்சமின் சகோதரியை காப்பாற்ற சிறிதும் யோசிக்காமல் குளத்தில் குதித்தான்.
பிறகு இருவரும் தண்ணீரில் இருந்து வெளியே வராமல் தவித்து வந்தனர்.இன்னொரு சகோதரன் குளத்திற்கு மேல் இருந்தபடி உதவிக்காக ஆட்களை குறிப்பிட்டுள்ளார். அப்போது இவர்களுடைய தந்தை ராபர்ட் லக்கெட் பதறியடித்து ஓடி வந்து பார்த்தார். அதன்பின் குளத்தில் குறித்த அவரால் தன் மகளை மட்டும் தான் காப்பாற்ற முடிந்தது.
அதன்பின் தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் பெஞ்சமினை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஆகையால் உறைந்த குளங்கள், குட்டைகள் மற்றும் ஏரிகளை சுற்றி கவனமாக இருக்குமாறு பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.