டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வில் கேட்கப்பட்ட ஆறு கேள்விகள் தவறானது என்று புகார்கள் எழுந்துள்ளன.
டிஎன்பிஎஸ்சி தமிழகம் முழுவதும் வருடந்தோறும் பல்வேறு தேர்வுகளை நடத்தி வருகின்றது. இதில் ஏராளமான மாணவர்கள் தேர்வெழுதி அரசு பணிகளுக்கு செல்கின்றனர். இந்நிலையில் ஜனவரி 3ஆம் தேதி அன்று தமிழகம் முழுவதும் குரூப் 1 தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வில் ஆறு கேள்விகளுக்காண வினா, விடை, மொழியாக்கம் ஆகியவை தவறாக இருந்ததாக புகார் எழுந்துள்ளது.
அதாவது 32, 33, 59, 64, 90, 163 ஆகிய 6 கேள்விகளும் தவறாக கேட்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. இந்த கேள்விகளுக்கு தகுந்த மதிப்பெண்களை அனைவருக்கும் வழங்க வேண்டும் என்று கோரிக்கையும் எழுந்துள்ளது.