விருதுநகரில் 8 வயது சிறுமியை கற்பழித்து கொன்றதில் ஒரு அசாம் வாலிபர் கைது செய்யப்பட மீதமுள்ள 5 பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் கூலித் தொழில் செய்து வரும் ஒருவரின் 8 வயது மகளை மர்ம நபர்கள் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்தனர். சம்பவம் குறித்து தகவலறிந்த காவல்துறை விரைந்து சென்று சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதில் சோமர் அலி என்ற அசாம் வாலிபர் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில்,
மேலும் 5 பேருக்கு இதில் தொடர்பு உள்ளது என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை நீதிமன்றத்தில் காவல் துறையினர் ஆஜர்படுத்திய நிலையில், அவரை வருகின்ற ஆறாம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் நீதிபதி உத்தரவிட்டார். மேலும் 5 குற்றவாளிகளை காவல்துறையினர் தேடி வந்த நிலையில்,
சிறுமியின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் சிவகாசி காவல் நிலையத்தை முற்றுகையிட்டு சிறுமியை சீரழித்த அவர்களை தூக்கிலிட வேண்டும் என்றும் அனைத்து குற்றவாளிகளையும் உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும் போராட்டம் நடத்தினர். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு ரூபாய் 25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு சலவைத் தொழிலாளர் கூட்டமைப்பு சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.