Categories
தேசிய செய்திகள்

6 மாசத்துல… பெண்களுக்கு எதிரா இவ்ளோ குற்றமா..?

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாட்டில் அதிகரித்து வருவதாக பெண்கள் நலத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பெண்களுக்கு எதிரான வன்முறை குற்றங்கள் நாட்டில் அதிகரித்த வண்ணம் உள்ளது. இது குறித்து மாநிலங்களவையில் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சரான ஸ்மிருதி இரானி எழுத்துபூர்வமாக பதில் கொடுத்துள்ளார். அதில், சென்ற மார்ச் 1 ஆம் தேதி முதல் செப் 18 ஆம் தேதி வரை மட்டும் பெண்களுக்கு எதிரான வன்முறை சார்ந்த 13,410 புகார்கள் தேசிய பெண்கள் ஆணையத்தில் கொடுக்கப்பட்டதாக கூறியுள்ளார்.

மேலும் அதில், வாட்ஸசப் மூலம் மட்டும் 1,443 புகார்கள் பெறப்பட்டு இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதில், 4,350 புகார்கள் வீட்டு வன்முறைக்கு எதிரான பெண்களைப் பாதுகாத்தல் என்ற பிரிவின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இதில் அதிகபட்சமாக உத்தரபிரதேசத்தில் 968 புகார்கள் பெறப்பட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |