Categories
குழந்தை வளர்ப்பு லைப் ஸ்டைல்

6 மாத குழந்தைக்கு… என்ன உணவு கொடுக்கலாம்… வாங்க பார்க்கலாம்..!!

ஆறு மாத குழந்தைக்கு என்னென்ன உணவுகள் கொடுக்க வேண்டும் என்பதை பார்ப்போம்.

குழந்தை பிறந்து முதல் ஐந்து மாதங்களுக்கு தாய்ப்பால் மட்டுமே சிறந்தது. ஆறாவது மாதத்தில் இருந்து தான் குழந்தைகளுக்கு மெல்ல மெல்ல திடமான உணவுகளை கொடுக்கத் தொடங்குவார்கள்.

இதில் 6வது மாதத்தில் குழந்தைக்கு என்னென்ன உணவுகளைக் கொடுக்கலாம் எனப் பார்க்கலாம்.

முதல் முறையாக குழந்தை திட உணவை சுவைத்து, தன் நாக்குக்கு புது சுவையை அறிமுகப்படுத்துவதால் குறைவான அளவிலிருந்து உணவைக் கொடுக்க தொடங்கலாம்.

ஆரம்பக் காலங்களில் பழங்களை அரைத்துக் கொடுப்பதே சிறந்தது. முதல் முதலில் கொடுத்தால், ஒரு நாளைக்கு ஒரு ஸ்பூன் என ஆரம்பித்து படிபடியாக உணவின் அளவை அதிகரிக்கலாம்.

குழந்தையை கட்டாயப்படுத்தி உணவை ஊட்ட கூடாது. குழந்தை உணவு வேண்டாம் எனக் கழுத்தை, முகத்தை திருப்பினால் உணவைக் கொடுப்பதை நிறுத்தி விட வேண்டும்.

மதியம் 12 மற்றும் மாலை 4 மணிக்கு திட உணவுகளைக் கொடுக்கலாம்.

மதிய வேலையில், ஆப்பிள், கேரட், பூசணி, வாழைப்பழம், சர்க்கரை வள்ளிக்கிழங்கு ஆகியவற்றை அரைத்துக் கொடுக்கலாம்.

மாலை வேலையில் அரிசிக் கஞ்சி, கேப்பைக் கூழ், சத்துமாவுக் கூழ், சம்பா கோதுமைக் கஞ்சி போன்றவற்றைக் கொடுக்கலாம்.

இரண்டு முறை திட உணவுக் கொடுத்தாலும் தேவையின் போதெல்லாம் தாய்ப்பால் கொடுப்பது நல்லது.

Categories

Tech |