கர்நாடக மாநிலத்தில் திரையரங்குகள் இன்று முதல் திறக்கப்படுகின்றன.
50 சதவிகித இருக்கைகளை மட்டுமே பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் நேற்று திரையரங்குகளை திறக்க மாநில அரசு அனுமதி அளித்திருந்த நிலையில் இன்று முதல் திரையரங்குகளை திறக்க திரையரங்கு உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் முடிவு செய்திருந்தனர். அதன்படி ஆறு மாதங்களுக்குப் பிறகு திரையரங்குகள் இன்று முதல் திறக்கப்படுகின்றன.
கொரோனா கட்டுப்பாட்டுப் பகுதிகளில் திரையரங்குகள் திறக்கப்படாது எனவும், முகக்கவசம் அணிந்து வந்தால் மட்டுமே பார்வையாளர்கள் உள்ளே அனுமதிக்கப் படுவர் எனவும் திரையரங்கு உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். 50 சதவீத இருக்கைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் எனவும், பணப் பரிவர்த்தனைகளை டிஜிட்டல் முறையில் மேற்கொள்ள வேண்டும் எனவும் அரசு தெரிவித்துள்ளது.