Categories
உலக செய்திகள்

“ஏன்.. இவ்ளோ ஆர்வம்…?” கால்பந்து போட்டியில் நடந்த தள்ளுமுள்ளு…. 6 பேர் பலியான சோகம்…!!

கேமரூன் நாட்டில் கால்பந்து போட்டியை காண மைதானத்திற்கு செல்ல முயற்சித்த போது கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

கேமரூன் நாட்டின் தலைநகரான யாவொண்டேவில் இருக்கும் ஒலெம்பே கால்பந்து மைதானத்தில் ஆப்ரிக்க கோப்பை தொடரின் முக்கிய போட்டி நேற்று நடந்தது. இதில் கேமரூன்-கொமொரோஸ் அணிகள் மோதின. எனவே, அதிகமான ரசிகர்கள் மைதானத்திற்குள் நுழைய முயற்சித்தனர்.

அப்போது அதிக கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அதாவது அந்த மைதானத்தில் 60,000 நபர்கள் தான் பார்வையிட முடியும். ஆனால் கொரோனா காரணமாக 80% மக்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். ஆனால், சுமார் 50 ஆயிரம் ரசிகர்கள் போட்டியை காணும் ஆவலில் ஒரே நேரத்தில் உள்ளே நுழைய முயற்சித்தனர்.

அளவுக்கு அதிகமான ரசிகர்கள் மைதானத்திற்குள் நுழைந்ததால் காவலாளிகள் கதவை அடைக்க முயற்சித்தனர். இதனால், மேலும் கூட்ட நெரிசல் ஏற்பட்டு ஆறு பேர் மூச்சுத்திணறி பலியாகினர். மேலும் பலருக்கு காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Categories

Tech |