அமெரிக்காவில் சுதந்திரதின அணிவகுப்பில் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தப்பட்டதில் 6 நபர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்க நாட்டில் துப்பாக்கி சூடு கலாச்சாரம் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது மீண்டும் ஹைலேண்ட் பூங்காவில் சுதந்திர தின அணிவகுப்பு நடைபெற்றது. சமயத்தில், திடீரென்று ஒரு துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தினார்.
இதில் ஆறு நபர்கள் உயிரிழந்துள்ளார்கள். விசாரணையில், சந்தேகத்தின் அடிப்படையில், ராபர்ட் கிரிமோ என்ற 22 வயதுடைய இளைஞர் கைதாகியுள்ளார். இது பற்றி காவல்துறையினர் தெரிவித்ததாவது, துப்பாக்கிசூடு தாக்குதல் நடத்திய நபர் மாடியில் நின்றவாறு, பயங்கர திறன் கொண்ட துப்பாக்கியால் நூற்றுக்கணக்கான மக்களை குறி வைத்து சுட்டிருக்கிறார்.