கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய, மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பைக் கட்டுப்படுத்த கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை ஊரடங்கு கடுமையாக பின்பற்றப்பட்டது. அதன்பின், மக்கள் அன்றாட வாழ்க்கையில் பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதற்காக ஊரடங்கில் தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டன.
ஆனால் தளர்வுகளுக்கு பின் கொரோனா மீதான பயம் கொஞ்சம் கூட இல்லாமல் அதிக அளவில் அலட்சியம் காட்டுவதாக புகார்கள் எழுந்துள்ளன. இதைத்தொடர்ந்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
சென்னை, காஞ்சி, செங்கல்பட்டு, ஈரோடு, திருவள்ளூர், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் சிறப்பு கவனம் தேவை. மக்கள் மாஸ்க் அணிவது உறுதி செய்ய கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும், தனிமனித இடைவெளி இல்லாமல் மக்கள் கூடுவதை தடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.