Categories
உலக செய்திகள்

வீட்டிலிருந்து வீசிய கடும் துர்நாற்றம்…. உள்ளே சென்றவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!!

தென் ஆப்பிரிக்க நாட்டில் ஒரு அடுக்கு மாடி கட்டிடத்தில் அழுகிப்போன நிலையில் ஆறு பிணங்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

தென் ஆப்பிரிக்க நாட்டின் ஜோகன்னஸ்பர்க் பகுதியில் இருக்கும் ஒரு குடியிருப்பிலிருந்து கடுமையாக நாற்றம் வீசுகிறது என்று அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் காவல்துறையினரிடம் தெரிவித்திருக்கிறார்கள். உடனடியாக அங்கு சென்ற காவல்துறையினர் அந்த வீட்டிற்குள் சோதனை மேற்கொண்டனர்.

அதில் ஒரு பெண்ணின் சடலம் மீட்கப்பட்டிருக்கிறது. காணாமல் போனதாக புகார் தெரிவிக்கப்பட்ட பெண்ணின் அடையாளங்கள் அதோடு ஒத்துப்போனது என்று காவல்துறையினர் கூறியிருக்கிறார்கள். இதனைத்தொடர்ந்து இறுதியாக அந்த பெண்ணை சந்தித்த நபர் பற்றி மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், 21 வயதுடைய ஒரு இளைஞர் கைதாகி உள்ளார்.

தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டிருக்கும் நிலையில், அந்த வீட்டின் பின்புறம் மேலும் 5 சடலங்கள் கிடப்பதை அந்த இளைஞர் காவல் துறையினருக்கு அடையாளம் காட்டியிருக்கிறார். தற்போது இந்த சம்பவம் குறித்து சிறப்பு அதிகாரிகள் குழு தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |