Categories
கிரிக்கெட் விளையாட்டு

6 ஆண்டுகளில் 4வது முறையாக …’சர் ரிச்சர்ட் ஹேட்லி’விருதை வென்று …! ‘கேன் வில்லியம்சன்’ சாதனை ….!!

நியூசிலாந்து கிரிக்கெட் வாரியத்தின்  ‘சர் ரிச்சர்ட் ஹேட்லி ‘விருதை  நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் பெற்றுள்ளார் .

ஆண்டுதோறும் நியூசிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் ,சார்பாக சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்திய வீரர்களுக்கு விருது வழங்கி கௌரவிப்பர். அந்த வகையில் 2020- 2021 ஆம் ஆண்டிற்கான ‘சர் ரிச்சர்ட் ஹேட்லி’ விருதுக்கான ,தேர்ந்தெடுக்கப்பட்ட வீரர்களின் பட்டியல் வெளியிடப்பட்டது. இந்த விருதிற்கு நியூசிலாந்து அணியின் கேப்டனான கேன் வில்லியம்சன் வென்றார் .

‘சர் ரிச்சர்ட் ஹேட்லி ‘விருது வழங்கப்பட்ட 6 ஆண்டுகளில்,  4வது முறையாக இந்த விருதை கேன் வில்லியம்சன் வென்று சாதனை படைத்துள்ளார் .அதோடு தேவன் கான்வே ஆண்களுக்கான ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் தொடரில்,   சிறந்த வீரருக்கான விருதையும் ,இவர்  பெற்றுள்ளார், இவர் வெஸ்ட் இண்டீஸ்,பாகிஸ்தான் அணிகளுக்கு எதிரான போட்டிகளில் அதிக ரன்களை குவித்துள்ளார் .அதோடு வங்காளதேசத்திற்கு எதிரான  3 நாட்கள் கொண்ட ஓவர் நாள் கிரிக்கெட் தொடர் போட்டிகளில்  , 225 ரன்களை அடித்து விளாசியுள்ளார் .

Categories

Tech |