Categories
மாநில செய்திகள்

“6-12ம் வகுப்பு வரை பள்ளியில் படித்த மாணவர்களுக்கு”…. வெளியான முக்கிய அறிவிப்பு…. உடனே போங்க….!!!

மருத்துவ சேர்க்கையில் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பிக்கும் மாணவர்கள் 6 முதல் 12-ம் வகுப்பு வரை படித்த பள்ளியில் நன்மதிப்பும் சான்றிதழ் பெற்று வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மாநில அரசின் ஒதுக்கீட்டின் கீழ் 6,958 எம்.பி.பி.எஸ் இடங்களும், 1,925 பி.டி.எஸ் இடங்களும் இருக்கின்றன.  இந்தப் படிப்பில் சேருவதற்கு நேற்று காலை 10 மணி முதல் ஆன்லைன் வாயிலாக மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். நீட் தேர்வில் தகுதி பெற்ற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். நேற்று தொடங்கி வரும் ஜனவரி 7ஆம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.  விண்ணப்பங்கள் சென்று சேர வேண்டிய கடைசி நாள் 10ம் தேதி மாலை 5 மணி என்று கூறப்பட்டுள்ளது.

நீட் தேர்வில் தகுதி பெற்ற மாணவர்கள் https://ugregtnmedicalonline.co.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் மாணவர் சேர்க்கையில் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பிக்கும் மாணவர்கள் தாங்கள் 6 முதல் 12-ம் வகுப்பு வரை படித்த பள்ளியில் இருந்து மதிப்பெண் சான்றிதழ் பெற்று அதை சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயம் என்று மருத்துவக் கல்வி இயக்கம் தெரிவித்துள்ளது. மேலும் சான்றிதழ்கள் முரணாக இருந்தால் சேர்க்கை ரத்தாகும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Categories

Tech |