Categories
மாநில செய்திகள்

6 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு….. முழு ஆண்டு தேர்வு தேதி…. மிக முக்கிய அறிவிப்பு…!!!!

6 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான முழு ஆண்டு தேர்வு நடைபெறும் தேதி குறித்து பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், 1 முதல் 5ம் வகுப்புகளுக்கு ஆண்டு இறுதி தேர்வு கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நடப்புக் கல்வியாண்டிற்கான கடைசி வேலை நாள் மே-13 எனவும், கல்வியாண்டு இறுதியுடன் தொடர்புடைய மற்ற அனைத்து நடவடிக்கைகளும் தற்போதுள்ள நடைமுறைகளின்படி மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 6 முதல் 9 – ஆம் வகுப்புகளுக்கு மே-5 முதல் மே-13  வரை தேர்வுகள் நடைபெறும் எனவும், தேர்வு முடிவுகள் மே-30 அன்று வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 9- ஆம் வகுப்பு செய்முறைத்தேர்வு மே 2 – மே 4 வரை நடைபெறும் எனவும், 2022-23 ஆம் கல்வி ஆண்டு 11 வது தவிர பிற வகுப்புகளுக்கு 13.06.2022 முதல் துவங்கும் எனவும், 11ஆம் வகுப்பு ஜூன்-24 முதல் வகுப்புகள் தொடங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |