Categories
மாநில செய்திகள்

“6 முதல் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பாடவேளை குறைப்பு”….. பள்ளிக்கல்வித்துறை உத்தரவு….!!!

6 முதல் 10 ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஒரு தமிழ் பாட வேலையை குறைத்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

2021-22 ஆம் கல்வி ஆண்டிற்கான இறுதி தேர்வு பொது தேர்வு கடந்த மே மாதம் முடிவடைந்த நிலையில் கோடை விடுமுறை மாணவ மாணவியர்களுக்கு விடப்பட்டது. ஒரு மாத கோடை விடுமுறைக்கு பின்பு பள்ளிகள் கடந்த மாதம் ஜூன் 13ஆம் தேதி நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் தமிழகத்தில் ஆறு முதல் பத்தாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கான பாடவேளையில் ஒரு சில மாற்றங்களை பள்ளிக்கல்வித்துறை கொண்டு வந்துள்ளது.

அதன்படி ஆறு முதல் பத்தாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு வாரத்திற்கு தமிழ், ஆங்கிலம் என்று ஏழு பாட வேலைகள் நடத்தப்பட்டு வந்த நிலையில் தற்போது அந்த எண்ணிக்கை ஆறாக குடைக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் சமூக அறிவியல் பாடத்திற்கான பாட வேலை ஒன்று அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் வரும் கல்வி ஆண்டிலிருந்து மாணவர்களுக்கு நீதி போதனை வகுப்புகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

Categories

Tech |