மின் கட்டணம் செலுத்த மே 15ஆம் 15 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக சற்றுமுன் அறிவித்துள்ளது சென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் செங்கல்பட்டு மதுரை தேனி ஆகிய மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த 15 நாட்கள் அவகாசம் அளித்து உத்தரவிட்டுள்ளது
வேகமாக பரவி வந்த கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். மக்களின் சிரமங்களைக் களைய வேண்டும் என்பதற்காக சம்பந்தப்பட்ட சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மதுரை, தேனி ஆகிய 6 மாவட்டங்களுக்கு பல்வேறுவிதமான சலுகைகளை தமிழக அரசு வழங்கி வருகிறது.
குறிப்பாக இந்த 6 மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் மின் கட்டணம் செலுத்த 15 நாட்கள் அவகாசம் வழங்கி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் இவர்கள் ஜூலை 30 ஆம் தேதி வரை மின் கட்டணத்தை செலுத்தலாம் என்று தெரிவித்துள்ளது. இதற்கான அறிவிப்பை மின் உற்பத்தி பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ளது.