Categories
மாநில செய்திகள்

6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…. வானிலை ஆய்வு மையம் அலெர்ட்….!!!!

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கும் சூழலில், மக்களுக்கு சற்று குளிர்ச்சியூட்டும் விதமாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் ஜூன் மூன்றாம் தேதி முதல் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது. அதனால் தமிழகத்தின் பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக ஜூன் 28, 29 ஆகிய நாட்களில் நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளை கடலோர மாவட்டங்கள், அதனை ஒட்டிய உள் மாவட்டங்கள், ஜூன் 27ஆம் தேதி வட மாவட்டங்கள், புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. மூன்று நாட்கள் தென் மேற்கு, மத்திய மேற்கு அரபிக் கடலில் பலத்த காற்று வீச வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

Categories

Tech |