Categories
அரசியல் மாநில செய்திகள்

6 மாதத்தில் அவருடைய கையிலா…? அண்ணாமலை மன்னிப்பு கேட்கணும் – ஆதவன் தீட்சண்யா…!!!

பாஜக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட வரவேற்பு நிகழ்ச்சியில் பேசிய அண்ணாமலை, தகவல் ஒளிபரப்புத்துறை இணை அமைச்சராக எல்.முருகன் பொறுப்பேற்றதை சுட்டிக் காட்டியுள்ள அண்ணாமலை, 6 மாதங்களில் அனைத்து ஊடகங்களையும் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து விடுவோம் என்றும் பகீரங்க மிரட்டல் விடுத்துள்ளார். 6 மாதத்தில் ஊடகங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதாக ஒன்றியத்தில் ஆளும் கட்சியாக உள்ள பாஜகவின் மாநில தலைவரே மிரட்டல் விடுத்து இருப்பது பத்திரிகையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இவ்வாறு ஊடகங்களை ஆறு மாதத்தில் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து விடுவதாக தமிழக பாஜகவின் புதிய தலைவர் அண்ணாமலை கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவரது அந்த பேச்சுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தமிழக முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஆதவன் தீட்சண்யா தெரிவித்துள்ளார்.

Categories

Tech |