Categories
தேசிய செய்திகள்

6 மாதங்களுக்கு நீட்டிப்பு….. மத்திய அரசு திடீர் முடிவு….!!!!

நாகாலாந்தின் மோன் மாவட்டத்தில் அண்மையில் டிராக்டரில் வந்த விவசாயிகள் உட்பட 14 பேர் ஆயுதப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். பயங்கரவாதிகள் என தவறாக நினைத்து ஆயுதப் படையினரால் தாக்குதல் நடத்தியதால் இந்த விபரீதம் ஏற்பட்டு உள்ளது. இதற்கு எதிராக மாநிலங்கள் முழுவதும் போராட்டங்கள் எழுந்தன. இதையடுத்து துப்பாக்கி சூடு நடத்திய வீரர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர் அவர்கள் மீதான குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க குழு அமைக்கப்பட்டது.

இந்த நிலையில் நாகாலாந்தில் ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்று அந்த மாநில முதல்வர் வலியுறுத்தி இந்த நிலையில் மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது இந்த விவகாரம் தொடர்பாக சிறப்பு குழு அமைத்து 45 நாட்களுக்கு அறிக்கை சமர்ப்பிக்க வலியுறுத்தப்பட்ட நிலையில் மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.

Categories

Tech |