Categories
தேசிய செய்திகள்

6 நாள் போராட்டம்… 3 மணி நேர பேச்சுவார்த்தை… விவசாயிகளின் கோரிக்கை ஏற்கப்பட்டதா..?

மூன்று மணி நேரத்திற்கு மேலாக மத்திய அரசுடன் ஏற்பட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு இல்லை என்று விவசாயிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் ‘டெல்லி சலோ’ என்ற போராட்டத்தை 7-வது நாளாக நடத்தி வருகின்றனர். போராட்டம் நடத்தும் நோக்கில் வந்த விவசாயிகள் டெல்லி எல்லையில் காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். அப்போது போலீசாருக்கும், விவசாயிக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தடியடி நடத்தி, கண்ணீர் புகை குண்டுவீசி, விவசாயிகளை போலீசார் கலைக்க முற்பட்டனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

நிலைமை தீவிரம் அடைந்ததை அடுத்து விவசாயிகள் டெல்லிக்குச் செல்ல போலீசார் அனுமதி வழங்கினார். மேலும் டெல்லியில் புராரி மைதானத்தில் விவசாயிகள் போராட்டம் நடத்த அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால் டெல்லி எல்லையான சிங்கு மற்றும் டிக்ரி பகுதியிலேயே விவசாயிகள் தொடர்ந்து 7-வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் டிசம்பர் 3ஆம் தேதி பேச்சுவார்த்தைக்கு வரும்படி மத்திய சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது. அந்த அழைப்பை ஏற்க மறுத்து, நேற்று நடந்த  பேச்சுவார்த்தைக்கு பங்கேற்க முதலில் மறுப்பு தெரிவித்த விவசாய குழுவினர், பின்னர் பங்கேற்பதாக அறிவித்தனர்.

மத்திய அரசு சார்பில் வேளாண் மந்திரி நரேந்திர சிங் தோமர் மற்றும் வர்த்தக கைத்தொழில் துறை மந்திரி பியூஷ் கோயல் ஆகியோர் பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர். விவசாயிகளின் குழு தலைவர்- மத்திய அரசு இடையே மாலை 3.30 மணிக்கு தொடங்கிய பேச்சுவார்த்தை சுமார் 3 மணி நேரம் நீடித்தது, இருப்பினும் எந்தவித முடிவும் எட்டப்படவில்லை. இதனால் போராட்டம் தொடரும் என விவசாயி குழு அறிவித்துள்ளது. மத்திய அரசு சார்பில் அடுத்தகட்ட பேச்சுவார்த்தை வியாழக்கிழமை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |