கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் 28ஆம் தேதி மகாராஷ்டிராவில் நாக்பூர் ரயில் நிலையத்தில் தனியாக இருந்த மாற்றுத்திறனாளி சிறுவனை மீட்டு ரயில்வே அதிகாரிகள் நாக்பூரில் உள்ள அரசு காப்பகத்தில் ஒப்படைத்தனர். பேச்சு மற்றும் கேக் புத்திரன் இல்லாத அந்த சிறுவனுக்கு பிரேம் ரமேஷ் என்று பெயரிடப்பட்டது.கிட்டத்தட்ட ஆறு வருடங்களுக்கு பின்னர் இந்த பெயரை ஆதாரத்திற்கு பதிவு செய்ய அந்த காப்பகத்தின் கண்காணிப்பாளர் நடவடிக்கை மேற்கொண்ட போது அந்த இளைஞரின் கைரேகை ஏற்கனவே ஒரு ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது.
அதன் பிறகு நடத்தப்பட்ட விசாரணையில் இந்த இளைஞர் பீகாரின் kaaaria மாவட்டத்தில் காணாமல் போன சச்சின் குமார் என்பது தெரியவந்துள்ளது.இந்த தகவலின் பெயரில் அவரின் குடும்பத்தினர் நாகூர் வந்து அந்த இளநரை வீட்டுக்கு அழைத்துச் சென்றனர். ஆறு வருடங்களுக்கு முன்பு காணாமல் போன இளைஞர் ஆதார் மூலம் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.