கெங்கவல்லி அருகே கூத்தாண்டவர் கோவில் திருவிழாவில் பொதுமக்கள் தேனீக்களுடன் தேன்கூடு வைக்கப்பட்ட தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே தேடாவூரில் 200 ஆண்டுகள் பழைமை வாய்ந்த கூத்தாண்டவர் கோவில் அமைந்துள்ளது.இக்கோவிலில் 6 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் தேன்கூடுகட்டி தேர் திருவிழா இரவு விடிய விடிய நடைபெற்றது. இத்திருவிழாவில் ஆயிரக் கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு திருத்தேரை இழுத்து தங்கள் நேர்த்தி கடன்களை செலுத்தினர்
தப்பாட்டம் முழங்க வாணவேடிக்கையுடன் விடிய விடிய வெகுவிமர்சையாக இத்திருவிழா நடைபெற்றது. தேன் கூடு கட்டப்பட்ட 50 அடி உயரமுள்ள அலங்கரிக்கப்பட்ட திருத்தேரை ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.பக்தர்கள் இழுத்த தேரில் தேனிக்களுடன் தேன்கூடு வைக்கப்பட்ட போதிலும் தேனீக்கள் ஒருவரை கூட தாக்காமல் இருப்பது இதன் சிறப்பு அம்சம் ஆகும்.