Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

“6 அம்ச கோரிக்கைகள்”…. ஆட்சியர் அலுவலகம் முன்பாக மாற்று திறனாளிகள் ஆர்ப்பாட்டம்….!!!!!

6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகம் முன்பாக பார்வையற்ற மாற்று திறனாளிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள்.

பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் ஆட்சியர் அலுவலகம் முன்பாக அகவொளி திறனாளிகள் நல சங்கத்தை சேர்ந்த பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டத்தில் 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்திய நிலையில் சங்கத் தலைவர் இதற்கு தலைமை தாங்கினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் 100% பார்வையற்ற மாற்று திறனாளிகள் கடும் உணமுற்றோர் பட்டியலில் சேர்க்க வேண்டும் எனவும் மாத ஓய்வுதியத்தை மூன்றாயிரமாக உயர்த்த வேண்டும் எனவும் போட்டி தேர்வுகளிலிருந்து விலக்களிக்க வேண்டும் எனவும் பதிவு அடிப்படையில் நேர்காணல் வாயிலாக தகுதி அடிப்படையில் ஒரு சதவீத இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் அரசு வேலை வழங்க வேண்டும் என 6அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள். பின் மனுவை ஆட்சியரை சந்தித்து கொடுத்து முதலமைச்சருக்கு அனுப்புமாறு வலியுறுத்திவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றார்கள்.

Categories

Tech |