Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

6மாத கர்ப்பிணிக்கு தொற்று…. மருத்துவர் உட்பட 80 பேருக்கு சோதனை…. 22 பேர் தனிமை …!!

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்த 6 மாத கர்ப்பிணி பெண்ணுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கர்பிணிப்பு சிகிச்சை அளித்த செவிலியர்கள், ஊழியர்கள் உட்பட 22 பேர் தனிமைப்படுத்தியுள்ளனர். 

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண், திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள சாமிநாத புரத்தை சேர்ந்தவர். 6 மாத கர்ப்பிணியான இந்த பெண் மேல் சிகிச்சைக்காக உடுமலைப்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனையில்  மகப்பேறு பிரிவில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை  நடத்தப்பட்ட நிலையில் அவருக்கு காய்ச்சல் அதிகரித்ததால்  அந்த பெண்ணிற்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் தனிமை படுத்தப்பட்டுள்ளார். இதனையடுத்து  மகப்பேறு பிரிவில் சிகிச்சை பெற்று வந்தவர்கள், மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள் என்று 80 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டு  வருகின்றது.மேலும் செவிலியர்கள், ஊழியர்கள் என 22 பேர் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

Categories

Tech |