Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் 50 நகரங்களில் 5ஜி சேவை…. உங்க ஊருக்கும் வந்துட்டா….? இதோ பாத்து தெரிஞ்சுக்கோங்க….!!!!!

நாடாளுமன்றத்தில் மத்திய தகவல் மற்றும் மின்னணு தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி‌ வைஷ்ணவ் 5ஜி சேவை குறித்து பேசியுள்ளார். கடந்த அக்டோபர் மாதம் 1-ம் தேதி முதல் டெலிகாம் நிறுவனங்கள் இந்தியாவில் 5ஜி சேவையை தொடங்கிவிட்டது. இந்த சேவையானது கடந்த மாதம் 26-ம் தேதி வரை 50 நகரங்களில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. அதன் பிறகு தற்போது ஏர்டெல் மற்றும் ஜியோ போன்ற நிறுவனங்கள் மட்டுமே 5ஜி சேவையை இந்தியாவில் வழங்கி வருகிறது.

இந்த நிறுவனங்கள் வருகிற 2024-ம் ஆண்டு இந்தியா முழுவதும் 5ஜி சேவையை தொடங்க திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் ஏர்டெல் நிறுவனமானது இந்தியாவில் உள்ள பாட்னா, கவுகாத்தி, பானிபட், குருகிராம், நாக்பூர், மும்பை, வாரணாசி, ஹைதராபாத், பெங்களூர், சிலிகுரி, டெல்லி மற்றும் சென்னை போன்ற நகரங்களில் 5ஜி சேவையை தொடங்கியுள்ளது.

இதேபோன்று ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமானது 5ஜி சேவையை இந்தியாவில் உள்ள பரிதாபாத், காசியாபாத், நொய்டா, குரு கிராம், புனே, நாத்துவாரா, ஹைதராபாத், பெங்களூர், கொல்கத்தா, வாரணாசி, மும்பை, டெல்லி, சென்னை மற்றும் குஜராத் மாநிலத்தில் உள்ள அனைத்து தலைநகரங்கள் போன்றவற்றில் தொடங்கியுள்ளது. வோடபோன், ஐடியா, பிஎஸ்என்எல் போன்ற நிறுவனங்கள் இதுவரை 5ஜி சேவையை தொடங்கவில்லை. மேலும் பிஎஸ்என்எல் நிறுவனம் அடுத்த வருகிற 5 அல்லது 6 மாதங்களுக்குள் 5ஜி சேவையை இந்தியாவில் தொடங்கும் என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |