உலகிலேயே முதன் முதலாக சீனாவில் 5 தொலைத்தொடர்பு சேவையை அந்நாட்டு அரசு அறிமுகம் செய்துள்ளது.
சீனாவில் அறிமுகமானது 5G :
தொழில்நுட்பத்தில் பல புரட்சிகளை அறிமுகம் படுத்தி வரும் சீனா தற்போது அதை நிரூபித்துக் காட்டும் வகையில் மற்றொரு இணைய புரட்சியை நிகழ்த்திக் காட்டி இருக்கிறது. உலகிலேயே முதல் நாடாக சீனா 5G தொலைத்தொடர்பு சேவையை தனது நாட்டு மக்களுக்கு அறிமுகம் செய்திருக்கிறது. இதன் மூலம் இணைய பயன்பாட்டை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் சென்று உள்ள சீனா தொழில்நுட்பத்தில் முன்னேறிய அமெரிக்கா போன்ற வல்லரசு நாடுகளுக்கு அறைகூவல் விடுத்து இருக்கிறது.
5G தொழில்நுட்பம் என்றால் என்ன ?
செல்போனுக்கு மட்டுமே உரிய அகன்ற அலைவரிசை 5G எனப்படும் ஐந்தாம் தலைமுறை தொழில்நுட்பம் திகழ்கிறது. தற்போதைய பயன்பாட்டில் உள்ள 3ஜி , 4ஜி சேவையை களில் இருந்து மாறுபட்டு 10 முதல் 100 மடங்கு வேகத்தில் செயல்படும் கூடியது இது. இதனால் ஹெட்ச்டி திரைப்படங்கள் உள்ளிட்டவைகளை கூட கண்ணிமைக்கும் நேரங்களில் பதிவிறக்கம் செய்துவிட முடியும். குறிப்பாக 5G சேவையில் இணைய துண்டிப்பு என்பது இருக்காது என்பதே இதன் முக்கிய சேவையை முக்கிய சிறப்பம்சமாக கூறப்படுகிறது.
சேவையை வழங்கும் நிறுவனங்கள் :
சீனாவில் தொடங்கப்பட்டுள்ள 5G சேவையை சீனா மொபைல்ஸ் , மொபைல் சீனா டெலிகாம் , சீனா யூனிகாம் ஆகிய மூன்று அரசு நிறுவனங்கள் வழங்குகின்றன. இதனை நாளடைவில் மற்ற தனியார் தொலைதொடர்பு நிறுவனங்களும் அளிக்க அனுமதி அளிக்கப்படும். இன்றைய நிலையில் பெல்ஜிங் , ஷாங்காய் , சுவாங்கோ, ஹேங்ஷோ உள்ளிட்ட பெரிய நகரங்களில் மட்டுமே 5G சேவை பயன்பாடிற்கு வந்துள்ளது. இந்த ஆண்டின் இறுதிக்குள் இந்த சேவையை 50 நகரங்களுக்கு விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளதாக சீன அரசு தெரிவித்திருக்கிறது.
அமெரிக்காவை விஞ்சிய சீனா :
தொலைத்தொடர்பு சேவையில் புதிய மைல்கல்லை எட்டியுள்ள சீனா உலக அரங்கில் மிகப்பெரிய வல்லரசு நாடான அமெரிக்காவுக்கு பெரும் சவாலாக பார்க்கப்படுகிறது. சீன தொலைத்தொடர்பு நிறுவனங்களின் மீது கடும் விதிமுறைகளை அமெரிக்க அதிபர் டிரம்ப் அமலாக்கிய நிலையில் இதற்கு பதிலடி தரும் வகையில் இந்த நடவடிக்கையை இருக்கிறது.சீன நிறுவனங்களின் உதவியில்லாமல் அமெரிக்காவால் 5G தொழில்நுட்பத்தை செய்து காட்ட முடியாது. என்று அமெரிக்க சீன நிறுவனமான ஹவாய் நேரடியாக சவால் விட்டிருக்கிறது.
சீனா அமெரிக்கா வர்த்தகப் போர் :
ஹவாய் உள்ளிட்ட மற்ற சீன நிறுவனங்கள் 5G சேவைகளை பயன்படுத்த வேண்டாம் என பல்வேறு நாடுகளுக்கு அமெரிக்கா மறைமுகமாக வலியுறுத்தி வருகிறது. உலகின் மிகப்பெரிய சந்தையாக விளங்கும் இந்தியா சீனாவிடம் இருந்து 5G சேவையை பெறக்கூடாது என்ற வலியுறுத்தலை தனிப்பட்ட முறையில் அமெரிக்கா முன்வைத்திருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக இரு நாடுகளுக்கும் இடையில் வர்த்தக போர் நடந்து கொண்டிருக்கும் நிலையில் சீனாவின் இந்த 5G அறிமுகம் இரு நாடுகளுக்கு இடையே எஞ்சிய உறவையும் கடினமாக்கும் என தொலைத்தொடர்பு வல்லுநர்கள் கணிக்கின்றனர்.
5ஜி காக காத்திருக்கும் நாடுகள் :
உலகில் தற்போது இந்தியா , ஜப்பான் , அமெரிக்கா , ஆஸ்திரேலியா உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட நாடுகள் 4G சேவையை வழங்கி வருகின்றன. தென் கொரியா மற்றும் ஜப்பான் நாடுகளை சேர்ந்த தொழில் தொடர்பு நிறுவனங்கள் 2019-ம் ஆண்டிற்குள் 5G சேவையை அறிமுகப்படுத்த போவதாக அறிவித்துள்ளனர். ஐரோப்பாவைச் சேர்ந்த தொலைத்தொடர்பு நிறுவனங்கள் 2020 ஆம் ஆண்டை இலக்காக வைத்து 5ஜி சேவையை அறிமுகப்படுத்த முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இவற்றில் இந்தியா , அமெரிக்கா , தென்கொரியா , நார்வே , ஹாங்காங் உள்ளிட்டவை 2020க்குள் தங்கள் நாடுகளில் 5G சேவையை அறிமுகம் செய்ய தீவிரம் காட்டி வருகின்றனர்.
இந்தியாவில் எப்போது அறிமுகம்:
இந்தியாவில் தொலைத்தொடர்பு சேவையை வழங்கிவரும் முன்னணி நிறுவனங்களுள் விரைவாக 5G தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்ய தீவிரம் காட்டி வருகின்றனர். இதில் சில நிறுவனங்கள் 5G சேவைக்கான சோதனை ஓட்டத்தை ஏற்கனவே முடித்துவிட்டு , மத்திய அரசின் அனுமதிக்காக காத்திருக்கின்றன. தர நிர்ணயம் செய்து அலைக்கற்றை ஒதுக்குவது உள்ளிட்ட அரசின் பணிகள் தான் தற்போது மிச்சம் இருக்கின்றன. அவை விரைவில் முடிந்து விட்டால் அடுத்த ஆண்டு ஜூன் மாதத்திற்கு முன்னதாகவே இந்தியாவிலும் 5G சேவையை எதிர்பார்க்கலாம்.