நாடு முழுவதும் அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டு இருப்பது 5ஜி தொழில்நுட்ப சேவை. அலைபேசியை அடிப்படையாகக்கொண்ட இணையதளம் சேவையே 5ஜி தொழில்நுட்பம். 5ஜி சேவையானது 4ஜியை விட 100 மடங்கு வேகம் உடையது என்று கூறப்படுகின்றது. அதாவது, ஒரு திரைப்படத்தை சில வினாடிகளில் நம்மால் டவுன்லோட் செய்து கொள்ள முடியும். 5ஜி தொழில்நுட்பத்தை வாகனத்தில் புகுத்துவதால் ஒரு குறிப்பிட்ட சாலையில் செல்லும் அனைத்து வாகனங்களும் ஒன்றோடு ஒன்று தகவலை பரிமாற்றிக் கொண்டு விபத்து ஏற்படுத்துவதையும், எரிபொருள் வீணாவதையும் தவிர்க்க முடியும் என்று கூறப்படுகின்றது.
அதுமட்டுமில்லாமல் இன்டர்நெட் ஆஃப் திங்ஸ் எனப்படும் பொருள்களுக்கான இணையம், செயற்கை நுண்ணறிவு, இயந்திர கற்றறிதல் உள்ளிட்ட தொழில்நுட்பங்களை பயன்படுத்தி நகரங்களின் பாதுகாப்பு, எரிசக்தி, சேமிப்பு, சுற்றுச்சூழல் பேரிடர் மேலாண்மை உள்ளிட்ட பல்வேறு விடயங்களில் துல்லியத்தை புகுத்த முடியும்.