Categories
தேசிய செய்திகள்

59 வயதில் விவாகரத்து கேட்டாங்க…. அப்புறம் 69 வயதில் மனைவியின் கரம் பிடித்த கணவர்…. நீதிமன்றத்தில் நேர்ந்த நெகிழ்ச்சி சம்பவம்…..!!!!

உலகத்திலுள்ள நீதிமன்றங்கள் பல விதமான வழக்குகளை சந்தித்துள்ளது. அந்த அடிப்படையில் கர்நாடகாவிலுள்ள குடும்பநல நீதிமன்றம் ஒரு புதுமையான வழக்கை எதிர் கொண்டது. அதாவது, கர்நாடக மாநிலம் தும்கூரில் நடைபெற்ற லோக் அதாலத் நிகழ்வில் பல வருடங்களாக நிலுவையில் இருந்த விவகாரத்து வழக்குகள் விசாரிக்கப்பட்டது.

அவற்றில் மொத்தம் 5 தம்பதிகள் வழக்கை வாபஸ் பெற்று மீண்டுமாக சந்தோஷமாக இணைந்தனர். 10 வருடங்களுக்கு முன் தன் 59 வயதில் விவாகரத்து வழக்கு தாக்கல் செய்த கணவர் தற்போது 69 வயதில் வழக்கை வாபஸ் பெற்று மீண்டுமாக மனைவியின் கரத்தை பிடித்து உள்ளார். அவருக்கு உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Categories

Tech |