இந்தியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனிடையே உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் அதிவேகமாக பரவி வருவது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் மருத்துவமனையில் ஒமைக்ரான் பாதித்த 73 வயது நபர் சிகிச்சை பெற்று வந்தார்.
இவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். 2021 டிசம்பர் 15-ல் அவருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும் அவர் 2 டோஸ் தடுப்பூசி செலுத்தி கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.