தென்னாப்பிரிக்காவில் ஒமைக்ரான் என்ற புதிய வைரஸ் பரவி உலக நாடுகளை அதிர வைத்துள்ளது. அதன்படி இந்தியாவில் இந்த வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதனால் அனைத்து மாநிலங்களில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இந்தியாவில் ஒமைக்ரான் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 781 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 540 பேர் குணமடைந்து வீட்டுக்கு திரும்பியுள்ளனர். 238 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் அதிகபட்சமாக டெல்லியில் 238 பேர், மகாராஷ்டிராவில் 167 பேர், குஜராத்தில் 73 பேர்,தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் 34 பேர் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.