Categories
தேசிய செய்திகள்

57 வருடங்களுக்குப் பிறகு…. எரிவாயு சிலிண்டர் விநியோகம்…. திருவிழா போல் கொண்டாடும் கிராம மக்கள்….!!!!

அருணாச்சலப் பிரதேசத்தில் விஜயநகர் என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறார்கள். இந்த கிராமம் மியான்மர் எல்லையை ஒட்டி அமைந்துள்ளது. இங்கிருந்து கிராமத்திற்கு 157 கிலோ மீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டும். இந்த பகுதியில் வசிக்கும் 500 குடும்பங்களும் எரிவாயு சிலிண்டருக்காக விண்ணப்பித்துள்ளனர். ஆனால் சரியான ஆவணங்கள் ஏதும் இல்லாத காரணத்தினால் யாருக்குமே எரிவாயு சிலிண்டர் கிடைக்கவில்லை.

இந்நிலையில் 57 வருடங்களுக்கு பிறகு 15 குடும்பங்களுக்கு எரிவாயு சிலிண்டர் வழங்கப் பட்டுள்ளது. இதை கிராம மக்கள் திருவிழா போல் கொண்டாடியுள்ளனர். இதனையடுத்து அப்பகுதியில் உள்ள பெண்கள் மழைக்காலங்களில் விறகு அடுப்புகளில் சமைப்பதால் சொல்ல முடியாத அளவுக்கு துயரத்திற்கு ஆளாகின்றனர். மேலும் கிராம மக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளதாக அமைச்சர் கம்லங் மோசாங் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |