ராமநாதபுரம், அருகே 7 வயது சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்திய நபர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டார் .
ராமநாதபுரம் பெரியபட்டினம் பகுதியை சேர்ந்த 7 வயது சிறுமி, பள்ளிக்கு செல்லும் வழியில் செய்யது அப்துல் காதர் வீட்டு வளாகத்தில் பழம் பறிக்க சென்றுள்ளார். அப்போது 55 வயதான செய்யது, என்பவர் ,மிட்டாய் வாங்க பணம் தருவதாக கூறி சிறுமியை வீட்டிற்குள் அழைத்துச் சென்று பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.
இதைப்பற்றி சிறுமி, தனது பாட்டியிடம் கூறியுள்ள நிலையில் , கீழக்கரை மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர் . அதனால் செய்யது மீது போக்சோ சட்டத்தின் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.