22 வயது இளம் பெண் முதியவரை திருமணம் செய்துள்ளார்.
இங்கிலாந்து நாட்டில் vannessa என்ற 22 வயது இளம்பெண் வசித்து வருகிறார். இவர் ஒரு பணக்கார குடும்பத்தைச் சேர்ந்த பெண்மணி ஆவார். இவர் டேபிள் டென்னிஸ் போட்டியல்ன் கலந்து கொள்வதற்காக சென்றபோது Geza (54) என்பவரை சந்தித்துள்ளார். இவர் டேபிள் டென்னிஸ் போட்டியின் பயிற்சியாளர் ஆவார். இந்நிலையில் Vannessa மற்றும் Geza ஆகிய 2 பேரும் அடிக்கடி சந்தித்ததால், 2 பேருக்கும் இடையே காதல் மலர்ந்தது. இவர்கள் கடந்த 2019-ம் ஆண்டிலிருந்து காதலிக்க தொடங்கியுள்ளனர். இந்நிலையில் இளம் பெண் தன்னுடைய காதலைப் பற்றி பெற்றோரிடம் தெரிவிக்கவே அவர்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இருப்பினும் சில நாட்களுக்கு பிறகு மகளின் காதலை பெற்றோர் ஏற்றுக் கொண்டுள்ளனர். இந்த இளம் பெண்ணுக்கும் முதியவருக்கும் தற்போது ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த குழந்தை பிறந்து 2 நாட்கள் கழித்து முதியவரும், இளம் பெண்ணும் திருமணம் செய்து கொண்டர். மேலும் இளம்பெண் தன்னுடைய கணவருடன் செல்லும்போதெல்லாம் எங்களைப் பார்த்து அப்பா, மகள் என்று பலர் நினைப்பதாகவும், கேலி செய்வதாகவும் வேதனை தெரிவித்துள்ளார்.