Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

54 ஆண்டுகளுக்கு பிறகு சாதனை…. திருவெண்ணைநல்லூரை கைப்பற்றிய தி.மு.க..!!

திருவெண்ணைநல்லூர் பேரூராட்சியை 54 ஆண்டுகளுக்கு பிறகு தி.மு.க வினர் கைப்பற்றியுள்ளனர். 

விழுப்புரம் மாவட்டத்திலுள்ள திருவெண்ணைநல்லூர் பேரூராட்சியில் 15 பிரிவுகளில் தேர்தல் நடைபெற்றுள்ளது. இந்த தேர்தலில்   55 வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர். தேர்தல் முடிவடைந்த பிறகு  திருவெண்ணைநல்லூரில் இருக்கும் காந்தி நினைவு பள்ளியில் வைத்து ஓட்டு எண்ணிக்கை நடைபெற்றுள்ளது.

இதில்  தி.மு.க கட்சியினர் பெரும்பான்மை இடத்தில் வெற்றி பெற்று திருவெண்ணைநல்லூர் பேரூராட்சியை முதன்முறையாக கைப்பற்றியுள்ளனர். திருவெண்ணெய்நல்லூர் பேரூராட்சியாக மாற்றப்பட்டு  54  ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் முதன் முறையாக தி.மு.க இந்தப் பகுதியில் வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Categories

Tech |