கொரோனா பரிசோதனை உபகரணங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பொதுவாக நம்முடைய உடலில் சளி மூலமாக உருவாகும் தீய நுண்கிருமிகள் இருக்கிறதா என்பதை ஆர்டி- பிசிஆர் ஆய்வின் மூலமாக கண்டறியலாம். அதன் பிறகு தீய நுண் கிருமிகள் மூலமாக உடலில் எதிர்பாற்றால் உருவாகி இருக்கிறதா என்பதை துரித பரிசோதனை மூலமாக கண்டறியலாம். இத்தகைய துரித பரிசோதனை கருவிகள் மற்றும் ஆர்டி- பிசிஆர் கருவிகளை உற்பத்தி செய்வதற்கு பல்வேறு நாடுகள் மருந்து கட்டுப்பாட்டு வாரியத்திடம் விண்ணப்பித்திருந்தன.
அதன்படி பிரான்ஸ், பிரிட்டன், தென் கொரியா மற்றும் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் விண்ணப்பித்திருந்தது. இந்நிலையில் கருவிகளை தர பரிசோதனை செய்த மருந்து கட்டுப்பாட்டு வாரியம் 264 ஆர்டி-பிசிஆர் கருவிகள் மற்றும் 264 துரித பரிசோதனை கருவிகளுக்கு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி மொத்தம் 528 உபகரணங்களை பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.