Categories
உலக செய்திகள்

“இது நல்லாருக்கே!”…. அலமாரியை அடுக்கினால் 50,000 ரூபாய்…. கலக்கும் மாணவர்…!!!

இங்கிலாந்தில் ஒரு மாணவர் அலமாரியில் இருக்கும் துணிகளை நேர்த்தியாக அடுக்கி கொடுப்பதன் மூலமாக மாதம் 50 ஆயிரம் சம்பாதிக்கிறார்.

தற்போதைய நவீன உலகம் எங்கேயோ போய்க்கொண்டிருக்கிறது. நகர்ப்புறங்களில் இருக்கும் ஆண், பெண் இருவருமே பெரும்பாலும் வேலைக்கு சென்று விடுகிறார்கள். எனவே அவர்களுக்கு வீட்டை சுத்தமாக வைப்பதற்கு நேரம் கிடைப்பதில்லை. இதனைப் பயன்படுத்தி பலர் சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்கள்.

அந்த வகையில், இங்கிலாந்தில் வசிக்கும் மக் மஹோன் என்ற மாணவர் புதிய உத்தியைக் கையாண்டிருக்கிறார். அதாவது வீடுகளில் இருக்கும் அலமாரிகளில் துணிகளை நன்றாக அடிக்கி கொடுப்பாராம். இதன் மூலம், இவர் மாதந்தோறும் 50,000 சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்.

உங்கள் வீட்டில் இருக்கும் அலமாரியில் துணிகள் நேர்த்தியாக இல்லையெனில் என்னை தொடர்பு கொள்ளுங்கள் என்று விளம்பரப்படுத்தி சம்பாதித்துக் கொண்டிருப்பதாக கூறியிருக்கிறார்.

Categories

Tech |