Categories
உலக செய்திகள்

உக்ரைன் போர்…. இதுவரை 50,000 ரஷ்ய வீரர்கள் பலி… வெளியான அறிக்கை…!!!

உக்ரைனில், ரஷ்யா நடத்திய போரில் தற்போது வரை ரஷ்யப்படையை சேர்ந்த 50,150 வீரர்கள்  உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது கடந்த பிப்ரவரி மாதத்தில் போர் தொடுக்க தொடங்கியது. அந்த போர், சுமார் ஏழு மாதங்களாக நீடித்துக் கொண்டிருக்கிறது. இதில், இரண்டு நாடுகளை சேர்ந்த ராணுவ வீரர்களும் ஆயிரக்கணக்கில் உயிரிழந்து கொண்டிருக்கிறார்கள். இது மட்டுமல்லாமல் உக்ரைன் நாட்டை சேர்ந்த அப்பாவி பொது மக்களும் பலியாகியுள்ளனர்.

இந்நிலையில், உக்ரைன் நாட்டை சேர்ந்த ஆயுதப்படையினர் வெளியிட்ட தகவலின் படி, இந்த போரில் தற்போது வரை சுமார் 50,150 ரஷ்ய படையினர் உயிரிழந்திருக்கிறார்கள் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

Categories

Tech |