Categories
மாநில செய்திகள்

50,000 பேருக்கு போன் போட்ட மின்சாரத்துறை…! செம மகிழ்ச்சியில் விவசாயிகள்… ஸ்டாலின் அரசு செம சாதனை ..!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி,  இலவச மின் இணைப்புக்கு ஏறத்தாழ 21 வருடங்களாக பதிவு செய்து காத்திருந்த விவசாயிகள்..  இலவச மின் இணைப்பு கிடைக்குமா ? கிடைக்காதா ? என்ற நிலையிலிருந்தவர்களுக்கு ”அனைவருக்கும் கிடைக்கும்” என்று நம்பிக்கையை உருவாக்கி,  அதை செயல்படுத்தி இருக்கக்கூடிய முதலமைச்சர் மாண்புமிகு தலைவர் அவர்கள்.

எனவே ஒரு மகத்தான திட்டம் ஒட்டுமொத்தமா விவசாயிகளுக்கு… எங்களுடைய மின்வாரிய அலுவலகத்தில் இருந்து இந்த 50,000 விவசாயிகளை தொடர்பு கொண்டு, உங்களுக்கான இலவச மின் இணைப்பு வழங்குவதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம் உங்களுடைய வருவாய்த் துறையின் உடைய ஆவணங்களை கொண்டு வந்து சமர்ப்பிக்க வேண்டும் என்று சொல்லிய பொழுது,  சில விவசாயிகள் மின்வாரிய அமைப்பிலிருந்து தான் நமக்கு அழைப்பு வந்திருக்கிறதா ? என்று அவர்கள் வந்து திரும்பவும் பரிசோதிக்க கூடிய அளவிற்கு அதிர்ச்சி.

பதிவு செய்து காத்திருந்து பல வருடங்களாகியும் கிடைக்காமல் இருந்தது,  தற்பொழுது நம்மளை அழைத்து இந்த இணைப்பு கொடுக்கறாங்களே அப்படிங்கிறது அவர்களுடைய மகிழ்ச்சி. அந்த அளவிற்கு சிறப்பு வாய்ந்த திட்டம்.  குறிப்பாக மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் மகத்தான திட்டம். முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் தான் விவசாயிகளுக்கு இலவசமாக மின் இணைப்பு வழங்கக்கூடிய திட்டத்தை தொடங்கி வைத்தார். அதன் தொடர்ச்சியாக மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் ஏறத்தாழ,  இப்பொழுது 50,000.

முதல்ல ஒரு லட்சம். இது முழுக்க முழுக்க சீனியாரிட்டி தான். இதில் எந்தவிதமான மாற்றமும் இல்லை. ஐம்பதாயிரம் பேருக்கு கணக்கெடுக்கிறோம். அதில் 100 பேர் வரல,  இணைப்பு பெற முயற்சி  எடுக்கல,  அப்படின்னா..  அடுத்த 100 பேர் இருக்கும். சோலார் திட்டங்கள் சம்பந்தப்பட்ட ஆய்வு அடுத்த வாரம் இருக்கு. ஏற்கனவே அறிவிக்கப்பட்ட அறிவிப்புகள்,  அதற்கு இடம் எடுக்கப்பட்டது எவ்வளவு ? முதல்ல எவ்வளவு தொடங்கப் போறோம் ? என்பது அடுத்த வாரத்தில் இதே அரங்கத்தில் உங்களை சந்திச்சு முழு விவரத்தை சொல்றோம்.

3066 பில்லர் பாக்ஸ் ஒரு மீட்டர் அளவிற்கு உயர்த்தப்பட்டிருக்கிறது.  மீதி இருக்கக்கூடிய பிலர் பாக்ஸ் படிப்படியாக உயர்த்தப்படும். கடந்த ஆண்டு மழையில் சென்னையில் எந்த இடங்களில் எல்லாம் பாதிக்கப்பட்டதோ, அது முழுவதுமாக கணக்கெடுக்கப்பட்டு,  ஒரு மீட்டர் அளவிற்கு உயர்த்தப்பட்டிருக்கின்றன. மீதி இருக்கக்கூடிய பிலர் பாக்ஸை படிப்படியாக உயர்த்துவதற்கான பணிகள்  நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என தெரிவித்தார்.

Categories

Tech |