விழுப்புரம் மாவட்டத்தில் அதிமுக சார்பாக நடைபெற்ற பேரறிஞர் அண்ணா அவர்களின் 114வது பிறந்தநாள் விழாவில் பேசிய முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம், திண்டிவனத்தில் இருந்து மரக்காணம் நோக்கி செல்லும் பிரதான சாலையின் விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளில் சாலை ஓரங்களில் இருக்கும் மரங்கள், மின்கம்பிகள் போன்றவற்றை அப்புறப்படுத்தாமலே சாலை விரிவாக்க பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுதான் திராவிட மாடலா..? குடும்பம் குடும்பமாக கொள்ளையடிப்பது தான் திராவிட மாடலா? ஒப்பந்ததாரராக இருந்தவர் எல்லாம் அமைச்சராக போட்டால் இப்படித்தான் நடக்கும்.
ஸ்டாலின் அமைச்சரவையில் உள்ள பத்திரபதிவுத் துறை அமைச்சர் அவருடைய வீட்டு திருமண நிகழ்ச்சியில் 5000 ஆடுகள், கோழிகள் என பிரம்மாண்டமான திருமணத்தை நடத்தினார். கார்டு ஸ்வைப் செய்யும் மிஷின் 100 வைத்து முப்பது கோடி ரூபாய் மொய் பணம் வாங்கி உள்ளார். பத்தரவு பதிவு துறை அமைச்சராக நானும் மூன்று முறை இருந்தேன். ஆனால் இந்த துறையில் இவ்வளவு கொள்ளை அடிப்பார்களா? என்பதை இவரைப் பார்த்து தான் தெரிந்து கொண்டேன் என்று பேசியுள்ளார்.