அயோத்தி ராமர் கோவிலில் பூமி பூஜையில் கலந்துகொண்ட உத்திரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், 500 ஆண்டு கனவு நிறைவேறி விட்டதாக தெரிவித்தார்.
அயோத்தி ராமர் கோவில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று வெகு சிறப்பாக நடைபெற்று உள்ளது. இதில் நம் நாட்டின் பிரதமர் மோடி கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி பூமி பூஜை விழாவை சிறப்பித்தார். இதுகுறித்து விழாவில் பங்கேற்ற உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறுகையில்,”ராமர் கோவில் கட்டுவதற்கான நீண்ட நாள் கனவு நிறைவேறியுள்ளது. 500 ஆண்டு போராட்டம் முடிவுக்கு வந்தது.
பக்தர்களின் பிரார்த்தனை இன்று நிறைவேறியுள்ளது. பல தலைமுறையை சேர்ந்தவர்களின் பிரார்த்தனைக்கு நல்ல பலன் கிடைத்துள்ளது. அயோத்தி நகரை உலகின் சிறந்த நகராக உருவாக்குவோம். கோவில் கட்டும் பணிகளை ராமர் கோவில் அறக்கட்டளை இனி முன்னெடுத்துச் செல்ல வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.