சுவிற்சர்லாந்தில் 500 கிலோ சீஸ்கள் திருப்பி அனுப்பப்பட்டதால், தயாரிப்பாளர் அதனை வீணாக்காமல் அதற்குரிய அமைப்பிடம் ஒப்படைத்துள்ளார்.
சுவிட்சர்லாந்தில் சீஸ் தயாரிக்கும் ஒருவர், ஒரு வியாபாரிக்கு சுமார் 500 கிலோ சீஸ்களை தயாரித்து அனுப்பியுள்ளார். ஆனால் அந்த வியாபாரி பார்சல் நேர்த்தியாக செய்யப்படவில்லை என்று அதை திருப்பி அனுப்பியுள்ளார். இதனால் சீஸ் தயாரிப்பாளர் அவை அனைத்தும் குப்பைத்தொட்டியில் தான் போட போகிறோம்.
உணவை வீணாக்குவது தவறு என்று நினைத்து அதற்காக போராடி வரும் Frischer Fritz என்ற ஒரு அமைப்பிடம் அந்த 500 கிலோ சீஸையும் ஒப்படைத்திருக்கிறார். அந்த அமைப்பு தற்போது அவற்றை இணையதளங்களில் மக்களிடம், அதனை வாங்கிக்கொள்ளுங்கள் என்று அறிவித்துள்ளது.