பழைய சோபாவை சுத்தம் செய்தபோது தம்பதியினருக்கு கிடைத்த 50 வருட பழமையான கடிதம் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இங்கிலாந்து நாட்டை சேர்ந்த பீட்டர்-ரோஸ் பெக்கேர்டன். இவர்கள் தனது வீட்டில் உள்ள ஒரு பழைய சோபாவை சுத்தம் செய்யும் போது சோபாவின் பின் புறத்தில் இருந்த ஒரு பழைய கடிதம் ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். அதனை எடுத்து பீட்டர் தனது மனைவியிடம் காண்பித்துள்ளார். இருவரும் அந்த கடிதத்தை பார்த்து விட்டு மிகுந்த ஆச்சரியத்தில் உள்ளனர். ஏனென்றால் 1969ஆம் ஆண்டு பிப்ரவரி 23ஆம் தேதி அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது தேதி ஆகும். அதில் வருங்காலம் எப்படி இருக்கும் என 11 வயது சிறுமி தனது ஆசிரியருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில் “இன்னும் சில ஆண்டுகளில் மக்கள் பசை போன்ற உணவை (பீட்சா) தான் சாப்பிடுவார்கள். தற்போது ரிசீவர் உள்ள போனை பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். எதிர்காலத்தில் திரையுடன் கூடிய தொலைபேசி வந்துவிடும். தொலைக்காட்சியில் மனிதர்கள் தெரிவதுபோல் தொலைபேசியிலும் மனிதர்களின் முகத்தை பார்த்துக் கொண்டே பேச முடியும்.” என அந்த சிறுமி எழுதியுள்ளார். சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு தற்போதுள்ள தொழில் நுட்பத்தை அந்த சிறுமி கடிதத்தில் எழுதி இருப்பது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. இது தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.