உள்ளாட்சி தேர்தலில் நாங்கள் தேவையான இடங்களை கேட்டு பெறுவோம் என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.
இன்று தேமுதிக கட்சியின் ஆலோசனை கூட்டம் அக்கட்சி தலைவர் விஜயகாந்த் தலைமையில் நடைபெற்றது.இதில் அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா , சுதீஷ் , பார்த்தசாரதி உட்பட பல்வேறு நிர்வாகிகள் பங்கேற்றனர். இந்த ஆலோசனை கூட்டம் முடிந்ததும் செய்தியாளர்களை சந்தித்த அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறுகையில் , வருகின்ற உள்ளாட்சித் தேர்தலில் நாம் எப்படி சந்திக்கணும் என்பது குறித்து விவாதிக்கப்பட்டது. கட்சிக்கு விசுவாசமான வேட்பாளரை நிறுத்த வேண்டும்.கூட்டணி கட்சிகளிடம் நாங்கள் 50 சதவீதம் கூட நாங்கள் கேட்போம் ஒரு கூட்டணி என்று வரும்போது பல கட்சிகள் இருக்கும்.
பலகட்சிகள் சேரும்போது யாருக்கு என்ன என்று குழு அமைத்து தேவையான இடங்களை பெறுவோம். கடந்த பாராளுமன்ற தேர்தலில் கூட்டணியில் இருந்த பாஜக மற்றும் பாமக முன்கூட்டியே தொகுதியை பங்கிட்டுக் கொண்டதால் கூட்டணி என்ற தர்மத்தோடு குறைவான இடங்களை பெற்றோம். அனால் உள்ளாட்சித் தேர்தலில் நிச்சயமாக தேசிய முற்போக்கு திராவிட கழகம் கூடுதலாக இடங்கள் கேட்டுப் பெறுவோம் முதலமைச்சரும் உறுதியளிக்கிறார் நிச்சயம் எங்களுக்கு அதிக இடம் தருவார் என்று நம்புகிறோம் என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.