நாடு முழுவதும், கொரோனா தொற்றால் இறந்தவர்களின் 50.5% பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 3,002 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக மத்திய அமைச்சகம் அறிவித்துள்ளது. இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை 45,300 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கொரோனவால் சிகிச்சை பெற்று வருபவர்களில் 2.94% பேர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது நாடு முழுவதும் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 63,624 ஆக அதிகரித்துள்ளது. உலகளாவிய இறப்பு சதவிகிதத்தை விட, இந்தியாவில் இறப்பு விகிதம் குறைவாகவே உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. மேலும் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,435 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,12,359 ஆக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.