கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் முதல்வரின் முகவரி துறை சார்பில் சிறப்பு குறை தீர்வு வார விழா நடைபெற்றது. இதற்கு மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் தலைமை தாங்கியுள்ளார். இந்த விழாவில் 18 வயதிற்கு மேற்பட்ட 50 மாற்று திறனாளிகளுக்கு 14 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பிரத்யேக செயலியுடன் கூடிய ஆண்ட்ராய்டு செல்போன்கள் வழங்கப்பட்டது. இதில் மாவட்ட வருவாய் அலுவலர் சத்யநாராயணன், திட்ட இயக்குனர் மணி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் சுரேஷ், மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் சுப்பிரமணி உட்பட பலர் உடன் இருந்தனர்.
Categories
50 மாற்றுத்திறனாளிகளுக்கு…. பிரத்யேக செயலியுடன் கூடிய செல்போன் வழங்கிய மாவட்ட ஆட்சியர்…!!
