Categories
உலக செய்திகள்

50 பயணிகளுடன் சென்ற படகு.. சரக்கு கப்பல் மீதி மோதி விபத்து.. 25 பேர் பலியான சோகம்..!!

வங்கதேசத்தில் 50க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்ற படகு சரக்கு கப்பல் மீதி மோதியதில் விபத்துக்குள்ளாகி 25 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

மத்திய வங்கதேசத்தின் தலைநகரான டாக்காவிற்கு அருகே இருக்கும் Shitalakshaya என்ற நதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 6.00 மணியளவில் சுமார் 50க்கும் அதிகமான நபர்களுடன் சிறிய டபுள் டக்கர் படகு ஒன்று Narayanganj என்ற நகரிலிருந்து அருகில் உள்ள Munshiganj என்ற மாவட்டத்திற்கு 45 நிமிட பயணமாக புறப்பட்டு சென்ற சிறிது நேரத்தில் சரக்கு கப்பல் மீது மோதி விபத்துக்குள்ளானது.

கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் அதனை கட்டுப்படுத்த திங்கட்கிழமையிலிருந்து தொடர்ந்து ஏழு நாட்கள் வரை நாட்டில் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படுகிறது. அந்த ஏழு நாட்களும் விமானம் போன்ற உள்நாட்டு பயணம் தொடர்பான சேவைகள் அனைத்துமே நிறுத்தப்படுகிறது. மேலும் கடைகள் உட்பட அனைத்துமே அடைக்கப்படவுள்ளது.

இதனால் மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்வதற்கு ஆர்வம் காட்டியதால் அனைத்து படகுகளிலும் நிரம்பியிருந்தன. மேலும் விபத்தான படகில் அதிகமான நபர்கள் இருந்ததால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. அதன் பிறகு மீட்பு குழுவினர் ஐந்து நபர்களின் சடலங்களை மீட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று மதியத்திற்கு பிறகு மேலும் 20 சடலங்கள் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உயிருடன் 8 நபர்கள் மீட்கப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும் மாயமானவர்களை தேடி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |